கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாக்காளர்‌ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால்‌ வளாகத்தில்‌ வாக்காளர்‌ உறுதிமொழியினை மாநகராட்சி உதவி ஆணையர்‌ (பணியமைப்பு) சுந்தாராஜன்‌ தலைமையில்‌, அனைத்து அலுவலர்களும்‌, பணியாளர்களும்‌ ஏற்கும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால்‌ வளாகத்தில்‌ வாக்காளர்‌ உறுதிமொழியினை மாநகராட்சி உதவி ஆணையர்‌ (பணியமைப்பு) சுந்தாராஜன்‌ தலைமையில்‌, அனைத்து அலுவலர்களும்‌, பணியாளர்களும்‌ ஏற்கும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது.

உறுதிமொழி விபரம்‌ வருமாறு,

“மக்களாட்சியின்‌ மீது பற்றுடைய இந்தியக்‌ குடிமக்களாகிய நாம்‌, நம்முடைய நலன்‌ கருதும்‌ மரபுகளையும்‌, சுதந்திரமான, நியாயமான மற்றும்‌ அமைதியான தேர்தல்களின்‌ மாண்பையும்‌ நிலைநிறுத்துவோம்‌ என்றும்‌, மேலும்‌ ஒவ்வொரு தேர்தலிலும்‌ அச்சமின்றியும்‌, மதம்‌, இனம்‌, சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின்‌ தாக்கங்களுக்கு ஆட்படாமலும்‌ அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும்‌ வாக்களிப்போம்‌ என்றும்‌ உறுதி மொழிகிறோம்‌.” என்ற உறுதிமொழியினை மாநகராட்சி உதவி ஆணையர்‌ (பணியமைப்பு) சுந்தாராஜன்‌ அவர்களின்‌ தலைமையில்‌ அனைவரும்‌ ஏற்றுக்கொண்டனர்‌.

இந்நிகழ்ச்சியில்‌ உதவி ஆணையர்‌ (கணக்கு) திரு.சரவணன்‌, நிர்வாக அலுவலர்‌ எம்‌.நார்‌அகமது, வருங்கால வைப்புநிதி கணக்கு அலுவலர்‌ மாணிக்கம்‌, தனித்துணை வட்டாட்சியர் தேர்தல் பி.தி.கணேஷ்பாபு மற்றும்‌ மாநகராட்சி அனைத்து அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...