வேலூரில் இருந்து கோவை வழியாக கடத்தி வரப்பட்ட 9.5 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்; ஒருவர் கைது

கோவை: கோவை கணியூர் சுங்கச்சாவடி பகுதியில் வருவாய்த்துறை இயக்குனராக அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் வேலூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 9.5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை: கோவை கணியூர் சுங்கச்சாவடி பகுதியில் வருவாய்த்துறை இயக்குனராக அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் வேலூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 9.5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை புறவழிச்சாலை வழியாக செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக கோவை வருவாய் துறை இயக்குனராக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று இரவு அதிகாரிகள் கணியூர் சுங்கச்சாவடி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வேலூரில் இருந்து வந்த லாரி ஒன்றை மடக்கிப்பிடித்து அதிகாரிகள் சோதனையிட்டதில் செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த வேலூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்த அதிகாரிகள் கடத்திவரப்பட்ட 4,27,95,000 ரூபாய் மதிப்புள்ள 9.5 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும், ராஜ்குமாரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வருவாய்த்துறை இயக்குனரக அதிகாரிகள், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கடத்தலுக்கு பின்னால் உள்ள கும்பல் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...