பெரியார் பற்றிய அவதூறு பேச்சை திரும்பப் பெறாவிட்டால் ரஜினிகாந்த்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் - நாகை திருவள்ளுவன்

கோவை: துக்ளக் விழாவில் பெரியார் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்ற நடிகர் ரஜினிகாந்த்தின் பேச்சு திமிர் தனமானது எனவும் அவதூறு பேச்சை திரும்பப் பெறவில்லை என்றால் ரஜினிகாந்த்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் தெரிவித்தார்.

கோவை: துக்ளக் விழாவில் பெரியார் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்ற நடிகர் ரஜினிகாந்த்தின் பேச்சு திமிர் தனமானது எனவும் அவதூறு பேச்சை திரும்பப் பெறவில்லை என்றால் ரஜினிகாந்த்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் தமிழ் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவிலேயே முதன் முதலாக 350 அடி உயரத்திற்கு அம்பேத்காருக்கு சிலை அமைக்க உத்தரவிட்டுள்ள மகாராஷ்டிரா அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

மேலும், பெரியாரை பற்றி ரஜினிகாந்த் அவதூறாகப் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது என கூறியவர், அவதூறு பரப்பிய ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்து, அவர் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார். மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் பேசி இருப்பது திமிர் தனமானது எனவும் அவதூறு பேச்சு திரும்பப் பெற வில்லை என்றால் ரஜினிகாந்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வலுவான போராட்டம் நடத்தப்படும் என்றார்.

போராடுகின்ற சக்திகளை கிண்டலாக பார்ப்பதற்கான பலனை ரஜினிகாந்த் அனுபவிப்பார் என கூறிய அவர், இந்துத்துவ சக்திகளின் பேச்சை கேட்டு, அவர்களின் கைக்கூலியாக ரஜினிகாந்த் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். நடக்காத செய்தியை வெளியிட்ட இந்துத்துவா நாளிதழின் தவறான செய்திகளை ரஜினிகாந்த் பேசுகின்றார் என கூறிய அவர், திட்டமிட்டு பெரியாரை அவமானப்படுத்த வேண்டும், அவதூறு பரப்ப வேண்டும் என்று சொல்லப்பட்ட பாசிச கருத்தே ரஜினியின் பேச்சு எனவும் தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...