நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ அதிகாரிகள் பயன்படுத்தும் ஜிம்கானா கிளப் வளாகத்தில் இன்று காலை காட்டெருமை கூட்டம் திடீரென புகுந்ததால் அப்பகுதி தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

குன்னூர் பகுதி வனத்தையொட்டி உள்ள பகுதியாகும் இங்கு சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை உணவு தேடி குடியிருப்பு பகுதியில் வலம் வருவது வாடிக்கையான ஒன்றானது.

இந்நிலையில், ராணுவ அதிகாரிகள் பயன்படுத்தும் ஜிம்கானா கிளப் பகுதியில் காட்டெருமைகள் குட்டியுடன் நுழைந்ததால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், காட்டெருமைகள் சாலையில் வரும்பொழுது அப்பகுதியில் உள்ளவர்கள் ஆபத்தை உணராமல் காட்டெருமையின் அருகே சென்று செல்பி எடுத்து வருகின்றனர். இதனால் காட்டெருமை அருகில் செல்பி எடுப்பவர்களை தாக்கும் நிலை உள்ளது.

கடந்த சில மாதத்திற்கு முன்பு காட்டெருமையால் தாக்கப்பட்டு சிம்ஸ் பூங்கா அருகே சுற்றுலாப் பயணி மற்றும் நடைப்பயிற்சி சென்றவர் என இருவர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே வனத்துறையினர் வனவிலங்கு அருகே சென்று செல்பி எடுப்போர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் காட்டெருமைகளை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.