குன்னூரில் ரேஷன் கடை கதவுகளை உடைத்து அரிசி மற்றும் உணவுப் பொருட்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

நீலகிரி: குன்னூரில் ரேஷன் மற்றும் மளிகை கடை கதவுகளை உடைத்த காட்டு யானைகள் அரிசி மற்றும் உணவுப் பொருட்களைச் சேதப்படுத்தின.

நீலகிரி: குன்னூரில் ரேஷன் மற்றும் மளிகை கடை கதவுகளை உடைத்த காட்டு யானைகள் அரிசி மற்றும் உணவுப் பொருட்களைச் சேதப்படுத்தின.



குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம், டெரேமியா, குறியமலை பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக நான்கு காட்டு யானைகள் சுற்றித் திரிந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வந்தன.



இந்நிலையில், தூதூர்மட்டம் அருகே உள்ள கிரேக்மோர் எஸ்டேட் கடைமட்டப்பகுதியில் புகுந்த காட்டு யானைகள், அங்குள்ள ரேசன் கடை மற்றும் சிவதாசன் என்பவருக்கு சொந்தமான மளிகைக்கடை கதவுகளை உடைத்து அரிசி மற்றும் உணவு பொருட்களை சேதப்படுத்தியது.



இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வருவதற்கு முன்பு காட்டு யானைகள் அருகில் இருந்த தேயிலை எஸ்டேட் பகுதிகளுக்குள் சென்றன. தாெடரந்து காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். உணவு தண்ணீருக்காக இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...