தூய இருதய ஆலய தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் மிகப்பழமையான தூய இருதய ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் இந்த ஆண்டு தேர்த்திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கடந்த 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத் துடன் துவங்கிய தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவணி இன்று இரவு நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் மிகப்பழமையான தூய இருதய ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் இந்த ஆண்டு தேர்த்திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கடந்த 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத் துடன் துவங்கிய தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவணி இன்று இரவு நடைபெற்றது.



முன்னதாக கோவை மாவட்ட பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. வால்பாறை தபால் நிலையம் முன் உள்ள தூய இருதய ஆலயத்தில் சென்டை மேளம் முழங்க வாண வேடிக்கையுடன் புறப்பட்ட தேர்பவணி ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவில், பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை வளாகம், வட்டாட்சியர் அலுவலகம், ஸ்டான்மோர் சந்திப்பு, புதிய பேருந்து நிலையம் வரை சென்று ஆலயம் திரும்பியது.



தேர் பவணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்துவ ஆண்கள் பெண்கள் குழந்தைகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பாடல்களை பாடியபடி ஊர்வலமாக வந்தனர். திருவிழாவை முன்னிட்டு தூய இருதய ஆலயம் மின் விளக்கு மற்றும் தோரனங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வால்பாறை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...