கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் மிகப்பழமையான தூய இருதய ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் இந்த ஆண்டு தேர்த்திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கடந்த 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத் துடன் துவங்கிய தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவணி இன்று இரவு நடைபெற்றது.

முன்னதாக கோவை மாவட்ட பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. வால்பாறை தபால் நிலையம் முன் உள்ள தூய இருதய ஆலயத்தில் சென்டை மேளம் முழங்க வாண வேடிக்கையுடன் புறப்பட்ட தேர்பவணி ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவில், பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை வளாகம், வட்டாட்சியர் அலுவலகம், ஸ்டான்மோர் சந்திப்பு, புதிய பேருந்து நிலையம் வரை சென்று ஆலயம் திரும்பியது.

தேர் பவணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்துவ ஆண்கள் பெண்கள் குழந்தைகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பாடல்களை பாடியபடி ஊர்வலமாக வந்தனர். திருவிழாவை முன்னிட்டு தூய இருதய ஆலயம் மின் விளக்கு மற்றும் தோரனங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வால்பாறை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.