கோவை: கோவை அன்னூர் பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற அதே பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

அன்னூர் அருகே உள்ள நல்லி செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி அன்னூர் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயில் தேரோட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், தேரோட்டம் முடிந்து மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் (22) வீட்டில் விடுவதாக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, காட்டு வழியே உட்புகுந்து சோள காட்டிற்குள் சிறுமியை அழைத்துச் சென்ற நிலையில், ஏற்கனவே அங்கு காத்திருந்த காளிதாஸ் (26) என்ற இளைஞர் மற்றும் அரவிந்த் ஆகியோர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளனர்.
இதையடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு பக்கத்து காட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதனையறிந்த அந்த இளைஞர்கள் இருவரும் தப்பி ஓடியுள்ளனர். பின்னர் சிறுமியை மீட்ட பொதுமக்கள் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் போலீசார் அரவிந்த் மற்றும் காளிதாஸ் ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது போக்ஸோ சட்டம் 7 மற்றும் 8 இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.