திருப்பூர் அருகே தோட்டத்தில் 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்; மத்திய புலனாய்வு போலீசார் விசாரணை

திருப்பூர்: திருப்பூர் அருகே சின்னக்கனூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்த மத்திய புலனாய்வு போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே சின்னக்கனூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்த மத்திய புலனாய்வு போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். 



திருப்பூர் மாவட்டம் சேவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னக்கனூர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவருக்கு அதே பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் உள்ள வீட்டை கேரளாவை சேர்ந்த சிலருக்கு வாடகைக்கு விடப்பட்டதாக கூறப்படுகிறது. கேரளாவை சேர்ந்த அந்த நபர்கள் வெள்ளை நிற கேன்களில் எரி சாராயம் தயாரித்து கேன்கள் மூலம் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், (மத்திய புலனாய்வு காவல் துறையினர் சேலம் மண்டலம்) போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இரவில் சின்னகன்னூர் பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார், கணேசன் என்பவர் தோட்டத்தில் வைத்து 450 கேன்களில் 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்தனர். 

இதனையடுத்து, வாடகைக்கு விடப்பட்ட இடத்தின் உரிமையாளர் கணேசனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கேரளாவை சேர்ந்த நபர்களை பிடிக்கவும் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...