கோவை: தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் சங்கத்தின் மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, சங்க வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்தது.

திருமணங்களுக்கு மட்டுமின்றி பல்வேறு விழாக்களுக்கு சமையல் பாத்திரங்கள், ஜென்சென்ட், ஒலி, ஒளி அமைப்பு, மேடை அமைப்பாளர்கள், அலங்காரம், சாமியானா உள்ளிட்ட பொருட்களை வாடகை மற்றும் ஒப்பந்த அடிப்படையில் விடுபவர்கள் இணைந்து, ‘தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் சங்கம்’ நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் கூட்டம் மற்றும் பதவியேற்பு விழா, கோவை, தடாகம் ரோட்டில் உள்ள அக்சயா கார்டனில் நடந்தது.
இந்த கூட்டத்தில், மாநில தலைவராக எஸ். பழனிசாமி, மாநில பொது செயலாளராக மணிமாறன், மாநில பொருளாளராக எஸ். பால்ராஜ், மாநில அமைப்பு செயலாளராக தஞ்சை ஆர். சிவா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். விழாவில், மாநில தலைவராக பதவி வகித்த, எம்.பரமேஸ்வரன், மாநில பொருளாளராக இருந்த தினகரன் ஆகியோர் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.
இந்த கூட்டத்தில், ஹயர் கூட்ஸ் தொழிலாளர்களின் நலனுக்காக தனியாக வாரியம் அமைக்க வேண்டும், ஒலி, ஒளி, ஜென்செட் பந்தல் உள்ளிட்ட பொருட்களை லாரிகளில் எடுத்துச் செல்லும் போது உடன் இரண்டு பேர் செல்ல போலீசார் அனுமதிக்க வேண்டும், ஜி.எஸ்.டி வரி விதிப்பை 18 சதவீதத்திலிருந்து 5% ஆக குறைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து கலந்து கொண்ட ராகவேந்திரா, செந்தில் ராஜ், மெலடிஸ் ராஜன், அக்ஷயா கார்டன் சுந்தர்ராஜன், ட்ரிபிள் எக்ஸ் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.