வால்பாறையில் எம்ஜிஆரின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கோவை: எம்ஜிஆரின் 103வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வால்பாறையில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



கோவை: எம்ஜிஆரின் 103வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வால்பாறையில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

அதிமுக நிறுவனரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 103வது பிறந்த நாள் விழா இன்று வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் வால்பாறையில் ரொட்டிக்கடை பஜாரில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு வால்பாறை அ.ம.மு.க நகர செயலாளர் நெல்லை செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் குஞ்சாலி, செல்வின் லாய், பாபுஜீ, மகளிரணி தனலட்சுமி உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.



இதே போல, அதிமுக நிறுவனரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 103வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வால்பாறை அ.தி.மு.க நகர செயலாளர் அலுவலகத்தில் நகர செயலாளர் எம் மயில் கணேசன், நரசப்பன், மிக்சர் கடை முருகன், சௌந்தரராஜன், ஏக சிவநாதன் எஸ்.கே.எஸ் பாலு, சீனி ராஜ், லோகேஸ்வரன், ராமர் செல்லையா, பாக்கியராஜ், ஜெயராமன், காஜாமைதீன் மற்றும் கழக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி பிறந்தநாள் கொண்டாடினர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...