திருப்பூரில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த மாமியார்; மாவட்ட ஆட்சியரிடம் கணவருடன் மனு அளித்த மருமகள்..!

திருப்பூர்: திருப்பூரில் வரதட்சணை கேட்டு மாமியார் துன்புறுத்துவதாக மருமகள் கணவருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் வரதட்சணை கேட்டு மாமியார் துன்புறுத்துவதாக மருமகள் கணவருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்த யுகாஷினி(22) என்பவர் இன்று அவரது குழந்தை மற்றும் கணவருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அந்த மனுவில், நான் எனது கணவர் கலையரசனுடன் வாழ்ந்து வருகிறேன். எங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், எனது மாமியார் ருக்குமணி, வரதட்சணைக் கேட்டு தொடர்ந்து தொல்லை தந்து வருகிறார். ஏற்கனவே கணவருக்கு அரசாங்க வேலை வாங்குவதாக ஒன்றரை லட்சம் கேட்டார். அதன்பின்னர் கடன் இருந்ததற்காக நகைகளை கேட்டு வாங்கினார். தற்போது, மகனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் ரூ. 2 லட்சம் கேட்டு அடித்து, துன்புறுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தபோதும் அவர்கள் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆகவே, வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தும் மாமியார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு கணவர் கலையரசன் மற்றும் கைக்குழந்தையோடு மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...