கோவை: உள்ளூர் விவசாயிகளுக்கு உழவர் சந்தையில் இடம் ஒதுக்கி தர கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: உள்ளூர் விவசாயிகளுக்கு உழவர் சந்தையில் இடம் ஒதுக்கி தர கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவையில் ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளில் உள்ளூர் உழவர்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு கடைகள் இல்லை என்றும் மலை மாவட்டங்களான நீலகிரி, ஊட்டி போன்ற இடங்களில் இருந்து வரும் காய்கறிகளை விற்பதற்கு உழவர் சந்தைகளில் இடம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது.
இந்நிலையில், உள்ளூர் விவசாயிகள் விவசாயம் செய்த காய்கறி விற்பதற்கு ஆர்.எஸ்.புரம் சிங்காநல்லூர் போன்ற பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளில் இடம் ஒதுக்கி தர வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி, கோவையில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர் போன்ற பல பகுதிகளில் விவசாயம் செய்து கோஸ், பீட்ரூட் போன்ற காய்கறிகளை விளைவித்து வருவதாகவும் ஆனால், அதை உழவர் சந்தைகளில் விற்பதற்கு இடம் தரப்படவில்லை என்று தெரிவித்தார்.

இது உள்ளூர் விவசாயிகளை புறக்கணிக்கும் செயலாக இருப்பதாக கூறிய அவர், மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக கோவையில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளில் உள்ளூர் விவசாயிகளுக்கும் இடம் ஒதுக்கித் தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.