கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு சிராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (48) முன்னாள் ராணுவீரர் இவருக்கு அமுதவள்ளி (42) என்ற மனைவியும் சச்சின்குமார் (17) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், கருப்புசாமிக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருப்பதால் மனைவி அமுதவள்ளியும் மகன் சச்சின்குமாரும் கடந்த 6 வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
மகன் காரமடையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு கருப்புசாமி தன் மனைவிக்கு போன் செய்து பேச வேண்டும் என வீட்டிற்கு வரச் சொல்லி உள்ளார். அதையடுத்து, அமுதவள்ளிமற்றும் மகன் வீட்டிற்கு சென்று உள்ளனர்.அப்போது அங்கு குடிப்போதையிலிருந்த கருப்புசாமி இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார், ஒரு கட்டத்தில் அப்பாவுக்கும் மகனுக்கும் கைத்தகராறு ஏற்பட்டு கருப்புசாமி அரிவாள் எடுத்து மகனை வெட்ட முயற்சி செய்தபோது, மகன் அரிவாளை பிடிங்கி அப்பாவை சரமரியாக வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த கருப்புசாமி சம்பவ இடத்திலே இறந்தார். இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சென்னகேசவன், உதவி ஆய்வாளர்கள் திலக், பிரபாகரன் ஆகியோர் உடலை கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் உடல்கூறு ஆய்விற்காக வைத்து உள்ளனர்.
மேலும் தந்தையை வெட்டிய மகனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.