கோவை: கோவை மாநகராட்சியில் 2397 நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு சீருடைகள் பரிசுப்பொருட்களை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
கோவை: கோவை மாநகராட்சியில் 2397 நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு சீருடைகள் பரிசுப்பொருட்களை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் விழா மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் நடைபெற்றது. தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரா அம்மன்.கே.அர்ச்சுணன் முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில், 1543 ஆண் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.20 லட்சத்து 7 ஆயிரத்து 708 மதிப்பிலும், 854 பெண் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.7 லட்சத்து 39 ஆயிரத்து 906 மதிப்பிலும் சீருடைகளையும், 2397 பணியாளர்களுக்கு ரூ.6 லட்சத்து 96 ஆயிரத்து 672 மதிப்பிலான 29,250 சோப்புகளையும், மற்றும் ரூ.7 லட்சத்து 75 ஆயிரத்து 426 மதிப்பில் பச்சரிசி 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, நெய், பாசிப்பருப்பு, ஏலக்காய், மஞ்சள் கொத்து, கரும்பு போன்ற பொருட்களை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
இந்த விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது;-
கோவை மாநகராட்சியில் சுகாதாரப் பணிகளையும், தாய்மைப் பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டுவருகிற பணியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும், இனிய பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாநகராட்சியில் அனைத்து நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு வருடத்திற்கு இரண்டு செட் சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு இரண்டு செட் சீருடைகள் ஆண் துப்புரவு பணியாளர்களுக்கு பேண்ட், சட்டை, காலணி, தலைப்பாகையும், பெண் துப்புரவு பணியாளர்களுக்கு ஜாக்கெட்டுடன் கூடிய சேலை, தலைப்பாகை மற்றும் காலணிகள் ரூ.50 லட்சம் செலவில் வாங்கி வழங்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்குக் கடந்த ஐந்து வருடங்களாக ECS முறையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் வருடம் தோறும் தனியார் மருத்துவமனைகள் மூலம் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு தகுந்த மருத்துவ உதவிகள் செய்யப்படுகிறது. கோவை மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் போனஸ் அரசு விதிமுறைகளின்படி ரூ.3 ஆயிரம் மாநகராட்சி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களை பயன்படுத்தி பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.