கோவை மாநகராட்சியில்‌ 2397 நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு சீருடைகள்‌ மற்றும்‌ பொங்கல்‌ பரிசுப்பொருட்களை வழங்கினார் அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி

கோவை: கோவை மாநகராட்சியில்‌ 2397 நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு சீருடைகள்‌ பரிசுப்பொருட்களை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ 2397 நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு சீருடைகள்‌ பரிசுப்பொருட்களை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில்‌ பொங்கல்‌ பண்டிகையை முன்னிட்டு, மாநகராட்சியில்‌ பணிபுரியும்‌ நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு சீருடைகள்‌ மற்றும்‌ பொங்கல்‌ பரிசுப்‌ பொருட்கள்‌ வழங்கும்‌ விழா மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தலைமையில்‌ நடைபெற்றது. தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரா அம்மன்‌.கே.அர்ச்சுணன்‌ முன்னிலை வகித்தார்.

இந்த விழாவில்‌, 1543 ஆண்‌ துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.20 லட்சத்து 7 ஆயிரத்து 708 மதிப்பிலும்‌, 854 பெண்‌ துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.7 லட்சத்து 39 ஆயிரத்து 906 மதிப்பிலும்‌ சீருடைகளையும்‌, 2397 பணியாளர்களுக்கு ரூ.6 லட்சத்து 96 ஆயிரத்து 672 மதிப்பிலான 29,250 சோப்புகளையும்‌, மற்றும்‌ ரூ.7 லட்சத்து 75 ஆயிரத்து 426 மதிப்பில்‌ பச்சரிசி 1 கிலோ, வெல்லம்‌ 1 கிலோ, நெய்‌, பாசிப்பருப்பு, ஏலக்காய்‌, மஞ்சள் கொத்து, கரும்பு போன்ற பொருட்களை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி வழங்கினார்

இந்த விழாவில் நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது;-

கோவை மாநகராட்சியில்‌ சுகாதாரப்‌ பணிகளையும்‌, தாய்மைப்‌ பணிகளையும்‌ சிறப்பாக மேற்கொண்டுவருகிற பணியாளர்கள்‌ அனைவருக்கும்‌ பாராட்டுகளையும்‌, இனிய பொங்கல்‌ வாழ்த்துக்களையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. மாநகராட்சியில்‌ அனைத்து நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு வருடத்திற்கு இரண்டு செட்‌ சீருடைகள்‌ வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும்‌ தீபாவளி மற்றும்‌ பொங்கல்‌ பண்டிகைகளை முன்னிட்டு இரண்டு செட்‌ சீருடைகள்‌ ஆண்‌ துப்புரவு பணியாளர்களுக்கு பேண்ட்‌, சட்டை, காலணி, தலைப்பாகையும்‌, பெண்‌ துப்புரவு பணியாளர்களுக்கு ஜாக்கெட்டுடன்‌ கூடிய சேலை, தலைப்பாகை மற்றும்‌ காலணிகள்‌ ரூ.50 லட்சம்‌ செலவில்‌ வாங்கி வழங்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்குக் கடந்த ஐந்து வருடங்களாக ECS முறையில்‌ சம்பளம்‌ வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள்‌ அனைவருக்கும்‌ வருடம்‌ தோறும்‌ தனியார்‌ மருத்துவமனைகள்‌ மூலம்‌ மருத்துவ முகாம்கள்‌ அமைக்கப்பட்டு முழு உடல்‌ பரிசோதனை செய்யப்பட்டு தகுந்த மருத்துவ உதவிகள்‌ செய்யப்படுகிறது. கோவை மாநகராட்சியில்‌ பணிபுரியும்‌ நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு ஆண்டுதோறும்‌ பொங்கல்‌ போனஸ்‌ அரசு விதிமுறைகளின்படி ரூ.3 ஆயிரம்‌ மாநகராட்சி மூலம்‌ வழங்கப்பட்டு வருகிறது. துப்புரவு பணியாளர்கள்‌ தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களை பயன்படுத்தி பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்‌ என நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி கூறினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...