டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஆஷி கோஷ் உள்பட பல மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதைத்தொடர்ந்து பல்கலைக் கழகத்தில் நடந்த தாக்குதலை கண்டித்து நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.



இந்த நிலையில், இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



மேலும், மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ஆர்எஸ்எஸின் மாணவர் அமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், தேசிய குடிமக்கள் பதிவேட்டினை கைவிட கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.

இதை தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் மாணவர்கள் தேசிய கீதம் பாடினார். ஆனால், காவல் துறையினர் தேசிய கீதம் பாட மறுப்பு தெரிவித்தனர். இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து தேசிய கீதம் பாடி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தனர். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...