கோவையில் வளர்ப்பு மகளை சரமாரியாக கத்தியால் குத்திய தந்தை..! தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்

கோவை: கோவை அருகே துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட வி எஸ் கே நகரில் வீட்டை விட்டு பிரிந்து சென்று பேருந்துக்காக காத்திருந்த இளம் பெண்ணை வளர்ப்புத் தந்தை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை அருகே துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட வி எஸ் கே நகரில் வீட்டை விட்டு பிரிந்து சென்று பேருந்துக்காக காத்திருந்த இளம் பெண்ணை வளர்ப்புத் தந்தை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமரின் மகன் துரைராஜ் (49). இவர் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு ஆதரவற்ற சிறுமியான மதுவை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். தற்போது 23 வயதான மது பணிநிமித்தமாக கோவை வந்துள்ள நிலையில், வளர்ப்புத் தந்தையுடன் சொந்த ஊருக்கு செல்ல மறுத்துள்ளார். மேலும் அவர் கோவை வரும் பொழுது தங்க நகைகளை எடுத்து வந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், அந்த இளம்பெண் இன்று காலை பணிக்கு செல்வதற்காக துடியலூரை அடுத்த வடமதுரை வி எஸ் கே நகர் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். இதனையறிந்து பின் தொடர்ந்து வந்த துரைராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மதுவை சரமாரியாக கை பகுதியில் குத்தியுள்ளார்.

பின்னர் தப்பியோட முயன்ற துரைராஜை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து துடியலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, துரைராஜை கைது செய்த போலீசார் கத்திக்குத்து தொடர்பான காரணங்களை விசாரணை செய்து வருகின்றனர். காயமடைந்த மது தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் இளம் பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...