கோவையில் ஸ்மார்ட்‌ சிட்டி திட்ட வளர்ச்சிப்‌ பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்த 15வது நிர்வாகக்‌ குழுக்கூட்டம்‌

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ கோவை ஸ்மார்ட்‌சிட்டி லிமிடெட்‌ தலைவர்‌ மற்றும்‌ நகராட்சி நிர்வாக ஆணையாளர்‌ முனைவர்‌ கா.பாஸ்கரன்‌ தலைமையில்‌ 15வது நிர்வாகக்‌ குழுக்கூட்டம்‌ நடைபெற்றது.

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ கோவை ஸ்மார்ட்‌சிட்டி லிமிடெட்‌ தலைவர்‌ மற்றும்‌ நகராட்சி நிர்வாக ஆணையாளர்‌ முனைவர்‌ கா.பாஸ்கரன்‌ தலைமையில்‌ 15வது நிர்வாகக்‌ குழுக்கூட்டம்‌ நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்‌ அரசு கூடுதல்‌ செயலாளர்‌ நிதித்துறை மற்றும்‌ ஸ்மாட்‌ சிட்டி நியமன இயக்குநர் டாக்டர்‌.ஆர்‌.ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌, நிர்வாக இயக்குநர் ஷ்ரவன்குமார் ஜடாவத்‌ ஆகியோர்‌ முன்னிலை வகித்தனர். மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌ நன்றி கூறினார்.

இந்த கூட்டத்தில்‌ கோவை மாநகராட்சியில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ நடைபெற்று வருகிற வளர்ச்சிப்‌ பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்தும்‌, மாநகராட்சியில்‌ 8 குளங்களில்‌ நடைபெற்று வருகிற மேம்பாட்டுப் பணிகள்‌, 24X7 குடிநீர்‌ வழங்கும்‌ திட்டப்பணிகள்‌ பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள்‌, மல்டி லெவல்‌ கார்‌ பார்க்கிங்‌, LED தெரு விளக்குகள்‌ பொருத்தும்‌ பணிகள்‌, நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ நிலையங்கள்‌ அமைத்தல்‌ (Micro Composting Centre), திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள்‌, மக்கும்‌ குப்பை, மக்காத குப்பை சேகரிக்கும்‌ வாகனங்களின்‌ பணிகள்‌ போன்ற வளர்ச்சித்‌ திட்ட பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்து ஸ்மார்ட்‌ சிட்டி லிமிடெட்‌ தலைவர்‌ மற்றும்‌ நகராட்சி நிர்வாக ஆணையாளர்‌ முனைவர்‌ கா.பாஸ்கரன்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ கலந்தாய்வு மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில்‌, மாநகர பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, ஸ்மாட்‌ சிட்டி தனி இயக்குநர்கள்‌ டி.ராஜ்குமார்‌, கிருத்திகா மற்றும்‌ செயற்பொறியாளர்‌ (திட்டம்‌) எஸ்‌.ரவிச்சந்திரன்‌, செயற்பொறியாளர்கள்‌ ஞானவேல்‌, பார்வதி, சரவணக்குமார்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌, தணிக்கையாளர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...