பெட்ரோல் பங்கில் பெண்கள் உடை மாற்றும் வீடியோவை எடுத்த விவகாரம்:- பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மணிகண்டன் பெட்ரோல் திருடியதாக ஒப்புக் கொண்ட காட்சியை வெளியிட்ட நிர்வாகம்

கோவை: கோவையில் பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர்கள் உடை மாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மணிகண்டன் பெட்ரோல் திருடியதாக ஒப்புக் கொண்ட காட்சியை நிர்வாக தரப்பினர் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவையில் பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர்கள் உடை மாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மணிகண்டன் பெட்ரோல் திருடியதாக ஒப்புக் கொண்ட காட்சியை நிர்வாக தரப்பினர் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியான வீடியோவில் மணிகண்டன் கூறும்போது:-

பெரிய லோடாக வரும் பெட்ரோலில் இருந்து எங்களது வண்டிக்கு பெட்ரோலை எடுத்துள்ளோம்.

மேலும் பாபு ,ஜெயபால், இளையராஜா மற்றும் நான் என நான்கு பேரும் இந்த பெட்ரோல் திருட்டில் ஈடுபட்டுள்ளோம். முன்னால் சூப்பர்வைசர் சுபாஷ் சொல்லி தான் இந்த செயலில் ஈடுபட்டோம், என தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, நிர்வாக தரப்பினர் திருடியதை ஒப்புக் கொள்கிறாயா என்று கேட்டதற்கு ஒப்புக்கொள்வதாக மணிகண்டன் தெரிவித்த வீடியோ காட்சி சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.

பெட்ரோல் பங்கில் பெண்கள் உடை மாற்றுவது தொடர்பான வீடியோ விவகாரம் தொடர்பாக பேசப்பட்டு வரும் சூழலில் பெட்ரோல் திருட்டு குறித்து நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...