கோவை: வால்பாறையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை: வால்பாறையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விநியோகம் நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படையினர் வால்பாறை நகர் மற்றும் கல்லூரி பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், வால்பாறை அடுத்த காமராஜ் நகர் பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை பிடித்து சோதனை செய்த போலீசார் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் காமராஜ் நகரை சேர்ந்த தாஸ் (எ) மரியசூசை (45) என்றும் அவர் ஏற்கனவே பல வழக்குகளில் கைதானதோடு குண்டாசில் சிறைக்கு சென்றவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். விசாரணைக்குப்பின் தாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.