வால்பாறையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது; 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை: வால்பாறையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: வால்பாறையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விநியோகம் நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படையினர் வால்பாறை நகர் மற்றும் கல்லூரி பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.



இந்நிலையில், வால்பாறை அடுத்த காமராஜ் நகர் பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை பிடித்து சோதனை செய்த போலீசார் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் காமராஜ் நகரை சேர்ந்த தாஸ் (எ) மரியசூசை (45) என்றும் அவர் ஏற்கனவே பல வழக்குகளில் கைதானதோடு குண்டாசில் சிறைக்கு சென்றவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். விசாரணைக்குப்பின் தாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...