குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி இஸ்லாமிய இயக்கங்களின் பொதுக்கூட்டத்தில் தீர்மானம்

திருப்பூர்: குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும் எனவும் அதற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் திருப்பூரில் நடைபெற்ற இஸ்லாமிய இயக்கங்களின் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர்: குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும் எனவும் அதற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் திருப்பூரில் நடைபெற்ற இஸ்லாமிய இயக்கங்களின் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



சிராஜுல் இஸ்லாம் மஸ்ஜித் & மதரசா சார்பில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் நொய்யல் வீதியில் நடைபெற்றது. இதில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் அதே போல் இந்த சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்த அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நெல்லை கண்ணனை கைது செய்த காவல்துறையை வன்மையாக கண்டிப்பதோடு அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த பொதுக்கூட்டத்தில் திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலை பாஜக தொடர்ந்து செய்து வருவதாகவும் நேற்றைய தினம் ஜே என் யூ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்தை கண்டிப்பதோடு பாசிச பாஜகவின் இத்தகைய செயலை இனி மாணவர் சமூகமும் எதிர்த்து நிற்கும் எனவும் அதற்கு திமுக உட்பட அனைத்து ஜனநாயக சக்திகளும் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...