நீலகிரி: நீலகிரியில் 80 சதவீத இடங்களை ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கைப்பற்றிய நிலையில், உபலை ஊராட்சி மன்றத்தை சுயேச்சை கைபற்றியது. உபதலை ஊராட்சியின் முதல் பெண் தலைவரும் குன்னூரில் உள்ள 6 பஞ்சாயத்தில் அதிக அளவாக 1319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ற வேட்பாளருமான சி. பாக்கியலட்சுமி கண்ணீர் மல்க பதவி ஏற்றுக் கொண்டார்.

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் 80% திமுக கூட்டணியும், 8% சுயேச்சை உறுப்பினர்களும், 12% அதிமுகவை சேர்ந்த உறுப்பினர்களும் வெற்றிபெற்ற நிலையில், கடந்த பத்து ஆண்டுகளாக உபதலை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த வே.சிதம்பரத்தின் மகள் சி.பாக்கியலட்சுமி 6 பஞ்சாயத்தில் அதிக பட்சமாக 1319 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

பெண்கள் சமுதாயத்தில் முன்னேற பல்வேறு இடர்பாடுகள் உள்ள நிலையில் தனது தந்தை செய்த நற்பணிகளை தானும் செய்ய தந்தை வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்ததாக கண்ணீர் மல்க பதவி ஏற்றுக் கொண்டார்.

அப்போது, உபதலை ஊராட்சியில் தற்போதைய முக்கிய பிரச்சினையாக உள்ள சாலைப்பிரச்னை, குடிநீர் பிரச்சினை, வனவிலங்குகள் தொல்லைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விரைந்து பணிகள் மேற் கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார். இவருடன் 15 மன்ற உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.