கோவையில் ஒப்பந்ததாரரின் புகாரை தொடர்ந்து ரூ.35 கோடிக்கான டெண்டரை ரத்து செய்த நெடுஞ்சாலைத் துறை அலுவலகம்

கோவை: கோவையில் ஒப்பந்ததாரரின் புகாரை தொடர்ந்து, சாலைகள் மற்றும் தடுப்புச் சுவர் சீரமைப்பு பணிகளுக்காக விடப்பட்ட 35 கோடி ரூபாய்க்கான டெண்டரை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ரத்து செய்தனர்.


கோவை: கோவையில் ஒப்பந்ததாரரின் புகாரை தொடர்ந்து, சாலைகள் மற்றும் தடுப்புச் சுவர் சீரமைப்பு பணிகளுக்காக விடப்பட்ட 35 கோடி ரூபாய்க்கான டெண்டரை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ரத்து செய்தனர்.



கூடலூர் சேரம்பாடி பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ராயின். இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். கூடலூர் பகுதியில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் சாலைகளில் மற்றும் தடுப்புச் சுவர்கள் இடிந்து பலத்த சேதமடைந்தது. கூடலூரில் இருந்து சேரம்பாடிவரை 30 இடங்களில் சாலைகள் மற்றும் தடுப்புச் சுவர்களை சரி செய்ய ரூ.35 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது.

இந்நிலையில், தனது அலைபேசி ஹாக் செய்யப்பட்டு டெண்டர் தொடர்பான அனைத்து தகவல் பரிமாற்றங்களும் வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் கூடலூர் பகுதியை சேர்ந்த சிபி, தேவாலா பகுதியை சேர்ந்த அனிஷ் ஆகியோர் டெண்டரை பெற தங்களுக்கு 50 லட்சம் ரூபாய் தர வேண்டுமென மிரட்டுவதாக குற்றம் சாட்டினார்.



இதனை தொடர்ந்து, கோவை திருச்சி சாலையில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட அலுவலகத்தில் ராயின் புகார் மனுவை அளித்தார். இந்த புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட கண்காணிப்பாளர் சுரேஷ் 35 கோடி ரூபாய்க்கான டெண்டரை ரத்து செய்ய உத்தரவிட்டார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...