கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணி

கோவை: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, கோவையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தினர்.


கோவை: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, கோவையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தினர்.



குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை உக்கடம் அருகேயுள்ள லாரிப்பேட்டை பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.

முன்னதாக ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து லாரிப்பேட்டை வரை பேரணி நடத்தினர். நீண்ட தேசிய கொடிகளைப் பிடித்தபடியும், தேசிய கொடிகளுடனும் பேரணியில் பங்கேற்றவர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், தேசிய குடிமக்கள் பதிவேட்டினை கைவிட கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.



மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும், இதனை திரும்ப பெறப்படும் வரை போராட்டங்கள் நடத்தப்படுமெனவும் அக்கட்சியினர் தெரிவித்தனர். இந்த பேரணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...