கோத்தகிரியில் கோத்தர் இன மக்களின் கம்பட்டராயர் பண்டிகை; கோத்தர் இன மக்கள் பாரம்பரிய நடனமாடி கோலாகலம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஆதிவாசி பழங்குடியின கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவிலில் கம்பட்டராயர் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஆதிவாசி பழங்குடியின கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவிலில் கம்பட்டராயர் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. 



இந்த பண்டிகையில் ஏராளமான கோத்தர் இன மக்கள் கலந்து கொண்டு தங்களது குலதெய்வத்தை வழிபட்டு பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். இந்த ஆண்டிற்கான பண்டிகை கோத்தகிரியிலிருந்து குன்னூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள கோத்தர் இன மக்கள் வசிக்கும் கிராமமான புது கோத்தகிரியில் பிறைகழித்தல் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது. 

இந்த நிகழ்வின் முக்கிய நாளான இன்று காலை புது கோத்தகிரி மக்கள் அனைவரும் தங்களது கலாச்சார பாரம்பரிய உடையணிந்து கோத்தகிரியில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தங்களது குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவிலுக்கு வந்தனர். அங்கு ஊர் பூசாரிகள் 4 பேர் தலைமையில் ஆதி கோவிலின் நடை‌திறக்கப்பட்டு தீபம் ஏற்றி தூபம் காட்டி கம்பட்டராயரை வழிபட்டனர். 



இதனை தொடர்ந்து, கோத்தர் இன மக்கள் அனைவரும் முன்னோர்களை வழிபட்ட பிறகு கோவிலின் முன்புறம் உள்ள நடுகல்லை சுற்றி தங்களது பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க கலாச்சார நடனமாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்விற்குப் பின் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கோவில் மீண்டும் பூட்டப்பட்டது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...