சின்னங்கள் மாறினாலும் வாக்களிக்க மறக்காத மக்கள்..! மேட்டுப்பாளையத்தில் ஊரக உள்ளாட்சி தலைவர் பதவிகளுக்கு தொடர்ந்து 20 ஆண்டுகள் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்!

கோவை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், மேட்டுப்பாளையத்தில் ஊரக உள்ளாட்சி தலைவர் பதவிகளுக்குப் போட்டியிட்டு தொடர்ந்து இருபது ஆண்டுகாலமாக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

கோவை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், மேட்டுப்பாளையத்தில் ஊரக உள்ளாட்சி தலைவர் பதவிகளுக்குப் போட்டியிட்டு தொடர்ந்து இருபது ஆண்டுகாலமாக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்காவிற்கு உட்பட்ட காரமடை ஒன்றியத்தில் 17 ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 56,822, பெண் வாக்காளர்கள் 59,889, மற்ற வாக்காளர்கள் 11 என மொத்தம் 1,16,746 வாக்காளர்கள் உள்ளனர். 

இதில் குறிப்பிட்ட ஊராட்சி பகுதிகளில் மட்டும் தொடர்ச்சியாக நான்கு தேர்தல்களில் தொடர்ந்து ஒரே வேட்பாளர் களம் கண்டு அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர். ஜடையம்பாளையம், பெள்ளாதி, சிக்காரம்பாளையம், மருதூர் உள்ளிட்ட சிற்றூராட்சி பகுதிகளில் தான் இந்த தொடர் வெற்றிகளை அந்த பகுதி வேட்பாளர்கள் பெற்று வருகின்றனர். 

ஊராட்சி தலைவர் பதவிக்கு அரசியல் கட்சி சின்னங்கள் ஒதுக்கப்படாத காரணத்தால் ஒவ்வொரு உள்ளாட்சி தேர்தலுக்கும் இந்த வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் மூலம் கொடுக்கப்படும் சின்னமானது மாறி மாறி புதிய சின்னங்கள் கொடுக்கப்படுகிறது . இருப்பினும் இந்த வேட்பாளர்களுக்கான மக்கள் ஆதரவு என்பது எப்போது அதிகமாகத்தான் இருக்கிறது. இதற்கு அவர்கள் மக்களிடத்தில் காட்டும் இணக்கம் மற்றும் அவர்களின் சுக துக்கங்களில் தேர்ந்தெடுக்கப்படும் இந்த மக்கள் பிரதிநிதிகள் நெருக்கமே காரணமாக கூறப்படுகிறது. சில நேரங்களில் வார்டு மறுவரை உள்ளிட்ட போதும் தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெண் வேட்பாளர்கள் என்றால் மனைவி சகோதரிகளை நிறுத்தினாலும் இவர்களது வாக்கு சற்றும் சரிவதில்லை. 



தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும் இந்த வேட்பாளர்களே மீண்டும் வெற்றி வாகை சூட்டியுள்ளனர். இதன்படி ஜடையம்பாளையம் பஞ்சாயத்துத் தலைவராக ஆர்.கே.பழனிசாமியும்,

சிக்கராம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் ஞானசேகரும், பெள்ளாதி பஞ்சாயத்து தலைவராக பூபதியும், மருதூர் ஊராட்சியில் முன்னாள் தலைவரான அறிவரசு மனைவி பூர்ணிமாவும் போட்டியிட்டு தேர்வாகியுள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகாலமாக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத போதும் தொடர்ந்து அந்த பகுதி கிராம மக்களுக்கு செய்யும் உதவிகள் காரணமாக மக்கள் இந்த தொடர் வெற்றியை அளித்து வருவதாக கூறுகின்றனர். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...