நீலகிரி: நீலகிரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச்சேர்ந்த பழங்குடியின தோடர் இனத்தைச் சேர்ந்த பொன் தோஸ் தலைவராவது உறுதியாகியுள்ளது.

நீலகிரி மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 6 பேரில் வார்டு 1 கூடலூரில் எம்.எம்.அனிபா சிபிஐஎம் கட்சியைச் சேர்ந்தவரும் வார்டு 2 கூடலூரில் பொன்தோஸ் திமுக, வார்டு 3 உதகையில் சசிகலா அதிமுக, வார்டு 4 கோத்தகிரி வனஜா திமுக, வார்டு 5 உதகை ராஜன் திமுக, வார்டு 6 குன்னூர் மீனா திமுக ஆகியோர் வெற்றி பெற்றனர். இதன் மூலம் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களாக திமுக 4, அதிமுக.1, சிபிஎம் 1, வெற்றி பெற்றதாலும் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி தனித்தொகுதியாக எஸ்.டி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டதால் திமுக கூட்டணியில் வென்றவர்களில் 5 உறுப்பினர்களில் யாரும் எஸ்.டி. வகுப்பில் பொன் தோஸ் (திமுக) மட்டும் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுவைச் சேர்ந்த பொன் தோஸ் தேர்வுசெய்யப் படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஊராட்சி தலைவராக உள்ள பொன் தோஸ் கடந்த 2006 முதல் 2011 வரை கோடநாடு ஊராட்சி மன்ற தலைவராக இருந்த போது மறைந்த முன்னாள் முதல்வர் கோடநாட்டில் விதிகளை மீறி பங்களா கட்டுவதாக கூறி அதற்கு நோட்டீஸ் வழங்கி அதனை இடிக்க பல்வேறு முயற்சிகளை செய்ததன் மூலம் பிரபலமானவர்.

மேலும், கோடநாடு எஸ்டேட் வழியாக காலகாலமாக அண்ணா நகர், காமராஜர் நகர் மக்கள் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சென்று இந்த வழியைப் பயன்படுத்த கோடநாடு நிர்வாகம் அனுமதி மறுத்தது. பின்னர் அங்கு ஒரு தனியார் நிறுவனம் மூலம் சேதனை சாவடி அமைத்து அண்ணா நகர், காமராஜர் நகர் கிராம மக்கள் சென்று வர பல்வேறு கிடுக்குப் பிடிகளை கோடநாடு நிர்வாகம் செய்தது. இந்த சாலையை வழக்கம் போல் திறந்து விட ணே்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடத்தியவர். கோடநாடு ஊராட்சி மன்ற தலைவராக இருந்த போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக கோடநாடு பங்களா விதிமீறிக் கட்டப்பட்டதாக நோட்டீஸ் வழங்கியது, கோடநாடு எஸ்டேட் சாலையை அண்ணா நகர் காமராஜர் நகர் கிராம மக்கள் பயன்படுத்த தொடர்ந்து கோடநாடு நிர்வாகத்துடன் நேரடி மோதலில் ஈடுபட்டவர்.
இவர் தோடர் இன பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவி எஸ்டி ரிசர்வ் என்பதால் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஒரே பழங்குடியினரான பொன் தோஸ் வருகிற 11ம் தேதி நடை பெறவுள்ள மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் தலைவராவது உறுதியாகியுள்ளது.