குழந்தைகள்‌ தொடர்பான ஆபாச வீடியோக்களை வைத்திருப்போர்‌ மற்றும்‌ சமூக வலைத்தளங்களில்‌ பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை - கோவை மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌

கோவை: கோவை மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌, சுஜித் குமார் இ.கா.ப அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குழந்தைகள்‌ தொடர்பான ஆபாச வீடியோக்களை வைத்திருப்போர்‌ மற்றும்‌ சமூக வலைத்தளங்களில்‌ பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

கோவை: கோவை மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌, சுஜித் குமார் இ.கா.ப அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குழந்தைகள்‌ தொடர்பான ஆபாச வீடியோக்களை வைத்திருப்போர்‌ மற்றும்‌ சமூக வலைத்தளங்களில்‌ பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். 

மேலும், சமீபத்தில் அத்தகைய குற்றத்தில் ஈடுபட்ட நபர் குறித்தும் அவர் மீது எடுக்கப்பட்ட சட்டரீதியான நடவடிக்கை குறித்தும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம்‌, சமூக ஊடகப்பிரிவில்‌ சமூக வலைதளங்களை கண்காணித்த போது ரென்டா பாசுமாடரி (28) என்ற நபர்‌ முகநூல்‌ பக்கத்தில்‌ சிறார்களின்‌ ஆபாச படங்களை பதிவிட்டிருந்தது தெரியவந்தது.

மேற்படி, நபர்‌ பொள்ளாச்சியில்‌ இருந்து ஆபாச படங்களை பதிவேற்றம்‌ செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டு, சமூக ஊடகப்பிரிவில்‌ இருந்து பொள்ளாச்சி அனைத்து மகளிர்‌ காவல்நிலையத்தில்‌ எழுத்து மூலமான புகார்‌ அளிக்கப்பட்டது. 

மேற்படி, குற்றவாளி, பொள்ளாச்சி பாலக்காடு சாலையில்‌ உள்ள தனியார்‌ டைல்ஸ்‌ கடையில்‌ வேலை பார்த்‌து வருவதாக கிடைக்கபட்ட தகவலின் பேரில் அவரை கைது செய்து அவனிடமிருந்த கைபேசியை ஆய்வு செய்தபோது அந்த கைபேசியில்‌ சிறார்களின்‌ ஆபாச படங்கள்‌ உட்பட பல ஆபாச படங்கள்‌ உள்ளது உறுதிப்படுத்தப்பட்டது. 

அதையடுத்து, குற்றவாளி மீது பொள்ளாச்சி அனைத்து மகளிர்‌ காவல்நிலைய குற்ற எண்‌: 01/2020, ச/பி. 13,14(1),15 of POCSO ACT 2012 r/w IT Act, -ல்‌ வழக்குப்‌ பதிவு செய்யப்பட்டுள்ளது. 

விசாரணையில், மேற்படி நபரின் சொந்த ஊர்‌ அசாம்‌ மாநிலம்‌ என்றும்‌, தந்தை பெயர்‌ பெர்கோ பாசுமாடரி என்றும்‌, தான்‌ அசாம்‌ மாநிலத்திலிருந்து வந்து இங்கே தங்கி டைல்ஸ்‌ கடையில்‌ வேலை பார்ப்பதாகவும்‌ தெரிவித்துள்ளான்‌. 

மேலும், தனக்கு ஆபாச படம்‌ பார்க்கும்‌ பழக்கம்‌ இருந்ததாகவும்‌ தான்‌ பார்க்கும்‌ படங்களை பதிவிறக்கம்‌ செய்து அதனை தனது முகநூலில்‌ பதிவேற்றம்‌ செய்ததும்‌, மேலும்‌ தனது நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையிலும்‌ பேஸ்புக்‌ மெசஞ்சர்‌ மூலமும்‌ அனுப்பிவைத்ததை ஒப்புக்கொண்டார்‌. 

விசாரணையை தொடர்ந்து, அந்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

"மேலும்‌, இவ்வாறான குழந்தைகள்‌ தொடர்பான ஆபாச புகைப்படம்‌ மற்றும்‌ வீடியோக்களை வைத்திருப்போர்‌ மற்றும்‌ சமூக வலைத்தளங்களில்‌ பதிவிடுவோர்கள்‌ பற்றிய விவரங்கள்‌ சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கூடிய விரைவில்‌ மேற்படி நபர்களும்‌ சட்டப்படியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்‌", என கோவை மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌, சுஜித்குமார்‌ இ.கா.ப அவர்கள்‌ எச்சரித்‌துள்ளார்‌.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...