கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சுஜித் குமார் இ.கா.ப அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை வைத்திருப்போர் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், சமீபத்தில் அத்தகைய குற்றத்தில் ஈடுபட்ட நபர் குறித்தும் அவர் மீது எடுக்கப்பட்ட சட்டரீதியான நடவடிக்கை குறித்தும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், சமூக ஊடகப்பிரிவில் சமூக வலைதளங்களை கண்காணித்த போது ரென்டா பாசுமாடரி (28) என்ற நபர் முகநூல் பக்கத்தில் சிறார்களின் ஆபாச படங்களை பதிவிட்டிருந்தது தெரியவந்தது.
மேற்படி, நபர் பொள்ளாச்சியில் இருந்து ஆபாச படங்களை பதிவேற்றம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டு, சமூக ஊடகப்பிரிவில் இருந்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் எழுத்து மூலமான புகார் அளிக்கப்பட்டது.
மேற்படி, குற்றவாளி, பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள தனியார் டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வருவதாக கிடைக்கபட்ட தகவலின் பேரில் அவரை கைது செய்து அவனிடமிருந்த கைபேசியை ஆய்வு செய்தபோது அந்த கைபேசியில் சிறார்களின் ஆபாச படங்கள் உட்பட பல ஆபாச படங்கள் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டது.
அதையடுத்து, குற்றவாளி மீது பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலைய குற்ற எண்: 01/2020, ச/பி. 13,14(1),15 of POCSO ACT 2012 r/w IT Act, -ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையில், மேற்படி நபரின் சொந்த ஊர் அசாம் மாநிலம் என்றும், தந்தை பெயர் பெர்கோ பாசுமாடரி என்றும், தான் அசாம் மாநிலத்திலிருந்து வந்து இங்கே தங்கி டைல்ஸ் கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளான்.
மேலும், தனக்கு ஆபாச படம் பார்க்கும் பழக்கம் இருந்ததாகவும் தான் பார்க்கும் படங்களை பதிவிறக்கம் செய்து அதனை தனது முகநூலில் பதிவேற்றம் செய்ததும், மேலும் தனது நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் பேஸ்புக் மெசஞ்சர் மூலமும் அனுப்பிவைத்ததை ஒப்புக்கொண்டார்.
விசாரணையை தொடர்ந்து, அந்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
"மேலும், இவ்வாறான குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை வைத்திருப்போர் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கூடிய விரைவில் மேற்படி நபர்களும் சட்டப்படியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்", என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சுஜித்குமார் இ.கா.ப அவர்கள் எச்சரித்துள்ளார்.