கோத்தகிரியில் பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த வழக்கில் தாய் கைது!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த வாழக்கில் தேடப்பட்டு வந்த அவரது தாயாரை கோத்தகிரி காவல்துறையினர் சனிக்கிழமையன்று கைது செய்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த வாழக்கில் தேடப்பட்டு வந்த அவரது தாயாரை கோத்தகிரி காவல்துறையினர் சனிக்கிழமையன்று கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குண்டுபெட்டு காலனி பகுதியில் கடந்த 31 ம்தேதி காலையில் தேயிலைத் தோட்டத்திற்கு செல்லும்போது பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை காென்று தாேட்டத்தில் புதைக்கப்பட்டிருந்ததை அந்த ஊர் மக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து காேத்தகிரி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது, பின்பு காவல்துறையினர் பச்சிளம் குழந்தையை உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் இதேப்பகுதியைச் சேர்ந்த முத்து லட்சுமி என்பரை பிடித்து விசாரித்த பாேது தனது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதாகவும், இதனால் வேராெருவருடன் ஏற்பட்ட நட்பில் இந்த குழந்தை பிறந்ததாகவும் இதனால் குழந்தையை டிசம்பர் 27 ஆம் தேதி காென்று புதைத்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனைத் தாெடர்ந்து காவல் துறையினர் அவரை கைதுசெய்தனர். தாயே பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...