நீலகிரியில் பனிப்பொழிவு காரணமாக காய்கறிகள் கருகாமல் இருக்க ‘ஸ்பிரிங்லர்’ மூலம் தண்ணீர் தெளிக்கும் பணி தீவிரம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக காய்கறிகள் கருகாமல் இருக்க ‘ஸ்பிரிங்லர்’ மூலம் தண்ணீர் தெளிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக காய்கறிகள் கருகாமல் இருக்க ‘ஸ்பிரிங்லர்’ மூலம் தண்ணீர் தெளிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.



மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, மலைப் பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. மேலும் சுகுனி, ஐஸ்பெர்க், சல்லாரை, புரூக்கோலி உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளும் பயிரிடப்பட்டு வருகிறது.

குறிப்பாக உதகையில் தீட்டுக்கல், எமரால்டு, முத்தோரை, பாலடா பகுதிகளிலும் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான நெடுகுளா, கட்டபெட்டு, வ.உ.சி. நகர், கூக்கல்தொரை, மசக்கல் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பல ஏக்கரில் மலைத் தோட்ட காய்கறிகளை பயிரிட்டு உள்ளனர்.



இந்த நிலையில் உதகை, கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக பனிப்பொழிவில் இருந்து மலைத் தோட்ட காய்கறி செடிகளை பாதுகாக்கும் வகையில் ‘ஸ்பிரிங்லர்’ மூலம் தண்ணீர் தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் காய்கறி செடிகள் பனிப்பொழிவால் கருகுவது தடுக்கப்படும். மேலும் விளைச்சலும் குறையாது. எனவே பலரும் தங்களது தோட்டங்களில் ‘ஸ்பிரிங்லர்’ மூலம் தண்ணீர் தெளிக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...