கோவை: பதினோரு நாட்களில் 1001 ஆசனங்கள் செய்யும் தனிநபர் சாதனை நிகழ்ச்சியை மேற்கொண்டுள்ளதாகவும் இந்த உலக சாதனை யோகாசன நிகழ்ச்சி நாளை நிறைவு பெறுவதாக மரகதம் யோகாலய நிறுவனரும் யோகாசன வல்லுநரான குணசேகரன் தெரிவித்தார்.
கோவை: பதினோரு நாட்களில் 1001 ஆசனங்கள் செய்யும் தனிநபர் சாதனை நிகழ்ச்சியை மேற்கொண்டுள்ளதாகவும் இந்த உலக சாதனை யோகாசன நிகழ்ச்சி நாளை நிறைவு பெறுவதாக மரகதம் யோகாலய நிறுவனரும் யோகாசன வல்லுநரான குணசேகரன் தெரிவித்தார்.
இது தொடர்பான கோவை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய குணசேகரன், 1001 ஆசனங்கள் செய்து தனிநபர் உலக சாதனையை கடந்த 15.09.2019 அன்று துவங்கியதாகவும் பின்னர் 21.09.19 முதல் 29.09.19 வரை என மொத்தம் பத்து நாட்களில் காலை 7 மணிக்கு துவங்கி இரவு ஏழு மணிவரை 962 யோகாசனங்களை செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக கோவை வைசியாள் வீதியில் உள்ள வாசவி கலையரங்கில் நாளை காலை துவங்கி மீதமுள்ள 39 ஆசனங்களை செய்து தனிநபர் உலக சாதனையை நிகழ்த்த உள்ளதாக கூறியவர், பதினோறு நாட்களில் இவ்வளவு ஆசனங்கள் செய்வது இதுவே உலகில் முதன்முறை எனவும் இதனை எலைட் வோர்ல்ட் ரெக்கார்ட்ஸ், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சான்றிதழ் அளிப்பார்கள் என்று கூறினார்.
இதற்கு முன் 2012ம் ஆண்டு 43 மணி நேரம் தொடர் யோகாசன செய்து சாதனை செய்துள்ளதாகவும் 2016ம் ஆண்டு அறுபத்து ஒன்பது மணி நேரம் யோகாசனம் செய்து தனது முந்தைய சாதனையை தானே முறியடித்ததாக தெரிவித்தார். மொத்தம் எண்பது லட்சம் ஆசனங்கள் இருப்பதாக கூறிய அவர், பதினோரு நாட்களில் 1001 ஆசனங்கள் செய்து தனிநபர் சாதனை நிகழ்த்த தினமும் தொண்ணூறு முதல் தொண்ணூற்றி ஐந்து ஆசனங்கள் செய்ததாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து, ஏகபாத சிரசாஸனம், உபவிஸ்ட சிரசாஸனம், போபுர உபவிஸ்ட சிரசாஸனங்களை உள்ளிட்ட சிலவற்றை செய்து காண்பித்தார்.