கோவை: கேசிடி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான எழுத்து மற்றும் பேச்சு போட்டியில் நாடு முழுவதும் வெளி மாநிலங்களிலிருந்து 1800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

’இங்க்லீஷ் விஸார்ட் பவுண்டேஷன்’, தேசிய அளவிலான ஸ்பெல் பீ போட்டியின் மாபெரும் இறுதி போட்டியை கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி வளாகத்தில் 2019 டிசம்பர் 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தியது.
மாநில அளவிலும், பள்ளிகளுக்கு இடையிலும் 2018–19ம் ஆண்டுக்கான எழுத்து மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்று தகுதி பெற்ற 1800 மாணவர்கள், பல்வேறு மாநிலங்களிலிருந்து பங்கேற்றனர். தமிழ்நாடு, ஆந்திரா, கோவா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம், மத்தியபிரதேசம், கேரளா, கர்நாடகா, ஒடிசா, நாகலாந்து, ராஜஸ்தான், அஸ்ஸாம், பஞ்சாப், சட்டீஸ்கர், தெலுங்கானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை சேரந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பேச்சு மற்றும் எழுத்து தேர்வு திறன்கள் பரிசோதிக்கப்பட்டன. முதலாவதாக உச்சரிப்பு மற்றும் பேச்சு போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற 10 பேருக்கு ரொக்க பரிசுகளும், விருதுகளும், தேசிய தர வரிசை பட்டியல் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக 10,000 ரூபாயும் இரண்டாம் பரிசாக 7000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 4000 ரூபாயும் 4 முதல் 10வது பரிசாக தலா 1000 ரூபாயும் வழங்கப்பட்டது.

மேலும், இந்த போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும், சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டது. இங்கிலீஷ் விஸார்ட் பவுண்டேஷன் இயக்குனர் பி.டி செபஸ்டியன், பல்வேறு மாநிலங்களிருந்து பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர்கள், குமரகுரு கல்வி நிறுவனத்தை சேர்ந்த ரவி கந்தசாமி, நிஷாந்த், ஜிகேடி மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர் சித்ரா சவுந்தர்ராஜன், மகேஸ்வரன் அன்ட் கோ ஆடிட்டர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.