தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான எழுத்து மற்றும் பேச்சு போட்டி; 1800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

கோவை: கேசிடி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான எழுத்து மற்றும் பேச்சு போட்டியில் நாடு முழுவதும் வெளி மாநிலங்களிலிருந்து 1800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

கோவை: கேசிடி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான எழுத்து மற்றும் பேச்சு போட்டியில் நாடு முழுவதும் வெளி மாநிலங்களிலிருந்து 1800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 



’இங்க்லீஷ் விஸார்ட் பவுண்டேஷன்’, தேசிய அளவிலான ஸ்பெல் பீ போட்டியின் மாபெரும் இறுதி போட்டியை கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி வளாகத்தில் 2019 டிசம்பர் 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தியது. 

மாநில அளவிலும், பள்ளிகளுக்கு இடையிலும் 2018–19ம் ஆண்டுக்கான எழுத்து மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்று தகுதி பெற்ற 1800 மாணவர்கள், பல்வேறு மாநிலங்களிலிருந்து பங்கேற்றனர். தமிழ்நாடு, ஆந்திரா, கோவா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம், மத்தியபிரதேசம், கேரளா, கர்நாடகா, ஒடிசா, நாகலாந்து, ராஜஸ்தான், அஸ்ஸாம், பஞ்சாப், சட்டீஸ்கர், தெலுங்கானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை சேரந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பேச்சு மற்றும் எழுத்து தேர்வு திறன்கள் பரிசோதிக்கப்பட்டன. முதலாவதாக உச்சரிப்பு மற்றும் பேச்சு போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற 10 பேருக்கு ரொக்க பரிசுகளும், விருதுகளும், தேசிய தர வரிசை பட்டியல் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக 10,000 ரூபாயும் இரண்டாம் பரிசாக 7000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 4000 ரூபாயு‌ம் 4 முதல் 10வது பரிசாக தலா 1000 ரூபாயும் வழங்கப்பட்டது. 



மேலும், இந்த போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும், சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டது. இங்கிலீஷ் விஸார்ட் பவுண்டேஷன் இயக்குனர் பி.டி செபஸ்டியன், பல்வேறு மாநிலங்களிருந்து பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர்கள், குமரகுரு கல்வி நிறுவனத்தை சேர்ந்த ரவி கந்தசாமி, நிஷாந்த், ஜிகேடி மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர் சித்ரா சவுந்தர்ராஜன், மகேஸ்வரன் அன்ட் கோ ஆடிட்டர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...