திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து போராட்டத்துடன் புத்தாண்டை வரவேற்ற இஸ்லாமியர்கள்; தேசியகொடி, மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

கோவை: கோவையில் உக்கடம் பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர்.


கோவை: கோவையில் உக்கடம் பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர்.



நாடு முழுவதும் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த சட்டம் மூலம் அதிக அளவில் பாதிக்கப்படும் இஸ்லாமியர்கள் பல்வேறு வகையில் பல்வேறு கோணங்களில் தங்களின் கோரிக்கைகளை போராட்டங்கள் வாயிலாக வலியுறுத்துகின்றனர்.



இந்நிலையில் நேற்று இரவு பதினொன்று முப்பது மணிக்கு உக்கடம் பேருந்து நிலையம் அருகே கூடிய பெண்கள் குழந்தைகள் மற்றும் என பலர் தங்களின் கைகளில் மெழுகுவர்த்தியையும், தேசிய கொடியையும் ஏந்தி டவுன்ஹால் சாலை வரைக்கும் பேரணியாக சென்றனர்.

மேலும், இதில் மத்திய, மாநில அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பட்டது. இதைத் தொடர்ந்து பனிரெண்டே கால் மணிக்கு போராட்டம் நிறைவு பெற்றது.

ஊரே புத்தாண்டை வரவேற்று பட்டாசு வெடித்து கொண்டாடி வரும் சூழலில், ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் சி.எ.எ மற்றும் என்.ஆர்.சி க்கு எதிராக போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போராட்டத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...