கோவை மாநகர காவல் துறை சார்பில் 2020 புத்தாண்டை வரவேற்கும் வகையில் பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய போலீசார்

கோவை: கோவையில் மேற்கு மண்டல ஐஜி , மாநகர காவல் துறை ஆகியவற்றின் சார்பில் 2020 புத்தாண்டை வரவேற்கும் வகையில் நள்ளிரவில் பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.


கோவை: கோவையில் மேற்கு மண்டல ஐஜி , மாநகர காவல் துறை ஆகியவற்றின் சார்பில் 2020 புத்தாண்டை வரவேற்கும் வகையில் நள்ளிரவில் பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.



2020-ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடும் விதத்தில் நாடு முழுவதும் பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும், ஆடல்கள் பாடல்கள் பாடியும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வெகு விமர்சியாக மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். 

இந்நிலையில் காவல்துறையும் பொது மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட ஆண்டுதோறும் காவல்துறை உயரதிகாரிகள் புத்தாண்டன்று பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். 



இந்த 2020 புத்தாண்டை கொண்டாடும் விதத்தில் கோவை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் ஐஜி பெரியய்யா கருமத்தம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட கணியூர் டோல் கேட் அருகே பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றார்.



அதேபோல கோவை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் பொதுமக்களுடன் புத்தாண்டை வரவேற்கும் விதத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...