கோவை: கோவையில் மேற்கு மண்டல ஐஜி , மாநகர காவல் துறை ஆகியவற்றின் சார்பில் 2020 புத்தாண்டை வரவேற்கும் வகையில் நள்ளிரவில் பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
கோவை: கோவையில் மேற்கு மண்டல ஐஜி , மாநகர காவல் துறை ஆகியவற்றின் சார்பில் 2020 புத்தாண்டை வரவேற்கும் வகையில் நள்ளிரவில் பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

2020-ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடும் விதத்தில் நாடு முழுவதும் பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும், ஆடல்கள் பாடல்கள் பாடியும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வெகு விமர்சியாக மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
இந்நிலையில் காவல்துறையும் பொது மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட ஆண்டுதோறும் காவல்துறை உயரதிகாரிகள் புத்தாண்டன்று பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.

இந்த 2020 புத்தாண்டை கொண்டாடும் விதத்தில் கோவை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் ஐஜி பெரியய்யா கருமத்தம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட கணியூர் டோல் கேட் அருகே பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றார்.

அதேபோல கோவை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் பொதுமக்களுடன் புத்தாண்டை வரவேற்கும் விதத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்.