திருப்பூர்: திருப்பூர் அணைக்காடு பகுதியில் வடக்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை சோதனை செய்ததில் சட்ட விரோதமாக எடுத்து வந்த ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள 51 கிலோ கஞ்சா போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், வாகனத்தில் வந்த மாயி, தமிழ் செல்வி, ரோசின் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாநகர பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் சஞ்சீவ் குமார் உத்தரவின் பேரில் மாநகர துணை காவல் ஆணையர் பத்ரிநாராயணன் மேற்பார்வையில் திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார், இன்று ஊத்துக்குளி சாலையில் உள்ள அணைக்காடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த இரண்டு இரு சக்கர வாகனத்தை சோதனை செய்ததில் சட்ட விரோதமாக எடுத்து வந்த ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள 51 கிலோ கஞ்சா போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அந்த வாகனத்தை ஓட்டி வந்த மாயி, தமிழ் செல்வி, ரோசின் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

குற்றவாளிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு ரெயில் மூலம் கஞ்சா மூட்டை வந்ததாகவும், இதனை இரு சக்கர வாகனத்தில் வைத்து மாநகர பகுதிகளில் விற்க கொண்டு செல்லும் போது போலீசார் கைது செய்துள்ளனர் என தெரிவித்தனர்.

இந்த குற்றவாளிகளை பிடித்த தனி படை போலீசாருக்கு காவல்துறை துணை ஆணையர் பத்ரிநாராயணன் பாராட்டு தெரிவித்தார்.