பிரதமர் மோடி தன்னிடம் போனில் பேசிய தருணம் மிகவும் மகிழ்ச்சியான தருணம் - பர்வீன் பாத்திமா

திருப்பூர்: தமிழகத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாகவும் இனிமையாக பழகுவதாகவும், பிரதமர் மோடி தன்னிடம் போனில் பேசிய தருணம் மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்று லடாக்கில் வேலை இல்லாததால் ஹிமாயத் திட்டத்தின் மூலம் ஜம்முவில் பயிற்சி பெற்று திருப்பூரில் பணியாற்றி வரும் பர்வீன் பாத்திமா தெரிவித்தார்.

திருப்பூர்: தமிழகத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாகவும் இனிமையாக பழகுவதாகவும், பிரதமர் மோடி தன்னிடம் போனில் பேசிய தருணம் மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்று லடாக்கில் வேலை இல்லாததால் ஹிமாயத் திட்டத்தின் மூலம் ஜம்முவில் பயிற்சி பெற்று திருப்பூரில் பணியாற்றி வரும் பர்வீன் பாத்திமா தெரிவித்தார்.



லடாக் கார்கில் பகுதியில் இருந்து ஹிமாயத் திட்டத்தின் மூலம் ஜம்முவில் பயிற்சி பெற்று திருப்பூரில் உள்ள எஸ்.சி.எம் என்ற தனியார் பனியன் நிறுவனத்திற்கு 90 பெண்கள் பணியில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இங்கு பணியாற்றி வரும் இவர்கள் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இத்திட்டத்தின் மூலம் பலர் பயனடைந்து உள்ளதாகவும் பல்வேறு மாநிலங்களில் நல்ல பணியில் அமர்த்தப்பட்டு உள்ளதாகவும் பேசினார் மேலும், திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் பர்வீன் பாத்திமா(24) என்ற பெண் லடாக் அருகே உள்ள கார்கில் பகுதியில் சிறிய கிராமத்தில் எந்தவிதமான வேலையும் இன்றி இருந்த நிலையில், இத்திட்டத்தின் மூலமாக பயிற்சி பெற்று தற்பொழுது திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பதவி பெற்று தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உள்ளார் என்று தெரிவித்தார். மேலும், பர்வீன் பாத்திமாவிற்கு நேரடியாக தொலைபேசி மூலம் அழைத்த பிரதமர் அவருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய பர்வீன் பாத்திமா, பிரதமர் தன்னிடம் தொலைபேசியில் பேசிய தருணம் மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்ததாகவும் தனது பணி குறித்து கேட்டறிந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தங்கள் ஊரில் இதுபோன்ற பணிகள் மற்றும் தொழிற்சாலைகள் மேம்பாட்டு வசதிகள் இல்லாததால் தமிழ்நாட்டிற்கு வந்து வேலை பார்ப்பதாகவும் தமிழகத்தில் பாதுகாப்பாக உள்ளதாகவும் நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் இனிமையாக பழகுவதாகவும் வேலைகளுக்கான பயிற்சியும் சிறப்பாக கொடுத்ததாக கூறினார்.



மேலும், தனது பெற்றோர் இவ்வளவு தூரம் சென்று பெண் வேலை பார்க்கிறார் என கவலை அடைந்ததாகவும் ஆனால் தான் இங்கு பாதுகாப்பாக உள்ளதாகவும் கூறிய அவர், இவ்வளவு பெரிய நிறுவனத்தில் பணி கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளதாகவும், தனது பெற்றோர் மற்றும் உடன் பணிபுரியும் நண்பர்கள், நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அரசுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பர்வீன் பாத்திமா தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...