கட்சி, மதம், சாதி வேறுபாடின்றி யார் கிராம முன்னேற்றத்திற்காக செயல்படுவார்கள் என பார்த்து வாக்களிக்க வேண்டும் - ஜக்கி வாசுதேவ்

கோவை: ஈஷா யோக மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலை பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.


கோவை: ஈஷா யோக மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலை பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். 



இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்த பஞ்சாயத்து தேர்தல் நாட்டில் மிகவும் முக்கியதுவமானது என்றும் மக்களுக்கு இதன் முக்கியத்துவம் முழுமையாக தெரியவில்லை எனக் கூறினார். 

மேலும், பஞ்சாயத்து அமைப்பு கிராமத்தில் உள்ள சிறிய பார்லிமெண்ட் போன்றது என்றும் கிராம மக்கள் தேவையை தீர்மானித்து, உடனுக்குடன் தீர்வு கொண்டு வர வாய்ப்பு உள்ளதால், மக்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தினார். 

பொறுப்பாக இருப்பவர்கள் என நம்பிக்கை உள்ளவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கட்சி, மதம், சாதி வேறுபாடின்றி யார் பொறுப்பாக கிராம முன்னேற்றத்திற்காக செயல்படுவார்கள் என பார்த்து வாக்களிக்க அவர் வலியுறுத்தினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...