குடியுரிமை சட்ட திருத்த மசோதா; வீட்டின் முன்பு கோலங்கள் வரைந்து எதிர்ப்பு தெரிவித்த கோவை திமுக மகளிர் அணி

கோவை: குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்தை கண்டித்து கோவையில் திமுக மகளிரணியினர் வீட்டின் முன்பு கோலங்கள் வரைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.


கோவை: குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்தை கண்டித்து கோவையில் திமுக மகளிரணியினர் வீட்டின் முன்பு கோலங்கள் வரைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். 



மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், சென்னையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் இட்டவர்களை நேற்று போலீசார் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மகளிரணியினர் கோலம் போட்டு எதிர்ப்புகளை தெரிவிக்க ஆணையிட்டார்.

அதன்படி கோவை, தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள சுண்டப்பாளையத்தில், திமுக மாநகர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி தலைமையில் இங்குள்ள வீடுகளுக்கு முன்பு குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கோலமிட்டுள்ளனர். "வேண்டாம் CAA - NRC" என்று குறிப்பிட்டு கோலமிட்டிருந்தனர். 

இது குறித்து மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி கூறுகையில், குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்தால் ஈழத்தமிழர்கள், சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மகளிர்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு எதிர்ப்புகளை தெரிவித்துள்ளோம். இந்த சட்டத்தை வாபஸ் பெரும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...