தொடர்ந்து மூன்று மணி நேரம் மல்லர்கம்ப உடல்வித்தை செய்து மூன்று சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து பொள்ளாச்சி மாணவி அசத்தல்

கோவை: பொள்ளாச்சியை சேர்ந்த மாணவி சுஷ்மிதா தொடர்ந்து மூன்று மணி நேரம் மல்லர்கம்ப உடல்வித்தை செய்து மூன்று சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சியை சேர்ந்த மாணவி சுஷ்மிதா தொடர்ந்து மூன்று மணி நேரம் மல்லர்கம்ப உடல்வித்தை செய்து மூன்று சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 



அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை காக்கும் விதமாகவும், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பாரம்பரிய கலைகள் குறித்த ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் கோவை நேரு யுவ கேந்திரா சார்பில் பாரம்பரிய கலைகளில் சாதனை நிகழ்த்தும் நிகழ்வு நடைபெற்றது. 

குறிப்பாக சிலப்பாட்டம், பறை இசை மற்றும் மல்லர்கம்ப உடல்வித்தை விளையாட்டு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கோவை அடுத்த பொள்ளாச்சியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவி சுஷ்மிதா தொடர்ந்து 3மணி நேரம் மல்லர்கம்ப உடல்வித்தை நிகழ்வை நிகழ்த்தினார். அந்தரத்தில் கட்டபட்ட கயிற்றில் தொங்கியவாரு இந்த மல்லர்கம்ப உடல்வித்தை செய்தவர், சில யோகாசனங்களை செய்து காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

மேலும், இந்த நிகழ்வின் மூலம் ஒரே நேரத்தில் கலாம் சாதனை புத்தகம், பாரத் சாதனை புத்தகம் மற்றும் அதிசய சாதனை புத்தகம் என மூன்று சாதனை புத்தகத்தில் இடம்பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.

 

இதுகுறித்து நம்மிடம் பேசிய சுஷ்மிதா கூருகையில், மல்லர்கம்ப உடல்வித்தை என்பது பாரம்பரிய கலை என்றும் இதனை தான் தனது 5வயது முதல் கற்று வருவதாகவும் இடையில் 10வகுப்பு பொது தேர்வு காரணமாக இரண்டு வருடம் இந்த மல்லர்கம்ப வித்தையை பயிற்சி செய்ய முடியாமல் போனதாக தெரிவித்தவர் கடந்த ஒரு மாத பயிற்சியால் தற்போது இந்த உலக சாதனையை நிகழ்த்தியுருப்பதாக தெரிவித்தார். 

மேலும், தனது பெற்றோர் மற்றும் பயிற்சியாளர் நல்ல உருதுணையாகவும் ஒத்திழைப்பையும் வழங்குவதாக தெரிவித்தவர், தான் மேன்மேலும் இது போன்ற சாதனை படைக்கவேண்டும் என்பதே தனது ஆவல் என தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...