நீலகிரி: குன்னூரில் சோலாடா மட்டம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களின் பெயர் வாக்கு பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் தாசில்தாரை முற்றுகையிட்டனர்.
நீலகிரி: குன்னூரில் சோலாடா மட்டம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களின் பெயர் வாக்கு பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் தாசில்தாரை முற்றுகையிட்டனர்.
.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வண்டிச் சோலை பஞ்சாயத்துக்குட்பட்ட கோடமலை, அடார் எஸ்டேட், சோலாடா மட்டம் பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க அனைத்து மக்களுக்கும் பூத் சீட்டு வழங்கினர். அப்போது, வெளியூரில் வசிக்கக்கூடிய மக்கள் தங்களது சொந்த ஊரில் வாக்களிக்க அந்தந்த வாக்குச்சாவடிக்கு வந்தனர். அங்கு புதிய பெயர் பட்டியல் எனக்கூறி வெளியூரில் வசிக்கக்கூடிய மக்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் உட்பட பலரது பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக வண்டிச் சோலை பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் 82 பேரின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து வந்த மக்கள், தங்களது பணிகளை விட்டு வாக்களிக்க வேண்டும் என்ற உரிமைக்காக வந்திருப்பதாகவும் தற்போது உரிமைகள் பறிபோனதாக பாதிக்கப்பட்ட மக்கள் குன்னூர் தாசில்தாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தபின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
.நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வண்டிச் சோலை பஞ்சாயத்துக்குட்பட்ட கோடமலை, அடார் எஸ்டேட், சோலாடா மட்டம் பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க அனைத்து மக்களுக்கும் பூத் சீட்டு வழங்கினர். அப்போது, வெளியூரில் வசிக்கக்கூடிய மக்கள் தங்களது சொந்த ஊரில் வாக்களிக்க அந்தந்த வாக்குச்சாவடிக்கு வந்தனர். அங்கு புதிய பெயர் பட்டியல் எனக்கூறி வெளியூரில் வசிக்கக்கூடிய மக்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் உட்பட பலரது பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.