கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு; மற்றொரு குற்றவாளி தொடர்பாக மறு விசாரணை செய்ய வழக்கறிஞர் குழுவினர் கோரிக்கை

கோவை: கோவை பன்னிமடையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மற்றொரு குற்றவாளி தொடர்பாக மறு விசாரணை செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் சமூக அமைப்பினர் தெரிவித்தனர்.


கோவை: கோவை பன்னிமடையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மற்றொரு குற்றவாளி தொடர்பாக மறு விசாரணை செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் சமூக அமைப்பினர் தெரிவித்தனர்.

கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமி கடந்த மார்ச் 25ம் தேதி மாயமானர். பின்னர் அடுத்த நாளே வீட்டின் பின்புறத்தில் இருந்து துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக சிறுமி கண்டெடுக்கப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாருடன் மற்றொருவருக்கும் தொடர்பிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரத்தினம் கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது, அவர் கூறுகையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மறு விசாரணை செய்யக்கோரி உயிரிழந்த சிறுமியின் தாயார் மனுவுக்கு நாளை உத்தரவிட வாய்ப்புள்ளது. குற்றத்தில் தொடர்புடைய விடுபட்ட நபரை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்றே விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதே தவிர, இந்த தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும் என்பதற்கில்லை. மேலும் அரசுகள் தலித் மக்களுக்கு எதிராகவே உள்ளது. இது அதிகாரிகள் மட்டத்திலும் எதிரொலிக்கிறது என்றார்.

உதாரணமாக மேட்டுப்பாளையம் சுவர் இடிந்து 17 பேர் இறந்த விவகாரத்தில் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருந்தும் தற்போதுவரை அது நடைபெறவில்லை. ஆகவே குற்றவாளிகள் எந்த விதத்திலும் தப்பிவிடக்கூடாது என்கிற நோக்கத்துடன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.



இந்த செய்தியாளர் சந்திப்பில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன், மனித உரிமை ஆர்வலர் ச.பாலமுருகன், வழக்கறிஞர்கள் வெண்மணி,மலரவன் மற்றும் சீலாராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....