கோவை வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள்‌ அனுப்பும்‌ பணியை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்‌

கோவை: கோவை மாவட்ட முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ நடைபெறுவதையொட்டி கோவை மாவட்டம்‌, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலிருந்து வாக்குப்பெட்டிகள்‌, வாக்குச்சீட்டுகள்‌ மற்றும்‌ உபகரணங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும்‌ பணியினை இன்று(டிச., 26) கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ பார்வையாளர்‌ ஜி.கோவிந்தராஜ்‌ மற்றும் மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌, மாவட்ட ஆட்சியர்‌ இராசாமணி இ.ஆ.ப. அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்‌.

கோவை: கோவை மாவட்ட முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ நடைபெறுவதையொட்டி கோவை மாவட்டம்‌, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலிருந்து வாக்குப்பெட்டிகள்‌, வாக்குச்சீட்டுகள்‌ மற்றும்‌ உபகரணங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும்‌ பணியினை இன்று(டிச., 26) கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ பார்வையாளர்‌ ஜி.கோவிந்தராஜ்‌ மற்றும் மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌, மாவட்ட ஆட்சியர்‌ இராசாமணி இ.ஆ.ப. அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்‌.



இந்த ஆய்வில்‌ பொள்ளாச்சி சார்‌ ஆட்சியர்‌ வைத்தியநாதன்‌ இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின்‌ இணைப்பதிவாளர்‌ பழனிசாமி, ஊரக வளர்ச்சி முகமையின்‌ செயற்பொறியாளர்‌ பசுபதி, வட்டாட்சியர்கள்‌ தணிகைவேல்‌, வெங்கடாச்சலம்‌, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்‌ ஜெயகுமார்‌, சாய்ராஜ்‌ உதவி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌, மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

கோவை மாவட்டத்தில்‌ ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்‌ 27.12.2019 வெள்ளிக்கிழமை மற்றும்‌, 30.12.2019 திங்கட்கிழமை என இரண்டு கட்டங்களாக தேர்தல்‌ நடைபெறவுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில்‌ ஊரக உள்ளாட்சி பதவிகளான மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்‌, ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்‌, கிராம ஊராட்சித்‌தலைவர்‌ மற்றும்‌ கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்‌ ஆகிய பதவிகளுக்கு நேரடித்‌ தேர்தல்‌ நடைபெறவுள்ளது. கோவை மாவட்டத்தில்‌ மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி(வடக்கு), பொள்ளாச்சி(தெற்கு) ஆனைமலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில்‌ நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.



கோவை மாவட்டத்தில்‌ முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள்‌ முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களுக்கு, வாக்குப்‌ பெட்டிகள்‌, வாக்குச்சீட்டுகள்‌ மற்றும்‌ அனைத்தும்‌ உபகரணங்களும்‌ வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும்‌ பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல்‌ நடைபெறும்‌ 5 ஊராட்சி ஒன்றியங்களில்‌ 293 வாக்குச்சாவடி மையங்களில்‌ 642 வாக்குச்‌ சாவடிகள்‌ அமைக்கப்பட்டுள்ளன. இதில்‌ 148 வாக்குச்சாவடிகள்‌ பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. இதில்‌ 48 வாக்குச்சாவடி மையங்களில்‌ ஒளிப்பதிவு செய்யவும்‌, 24 மையங்களில்‌ வெப்‌ கேமரா பொருத்தப்பட உள்ளது. மீதமுள்ள வாக்குச்சாவடி மையங்களில்‌ நுண்‌ தேர்தல்‌ பார்வையாளர்கள்‌ மூலம்‌ கண்காணிக்கப்படவுள்ளது. முதற்கட்ட தேர்தல்‌ நடைபெறும்‌ 5 ஊராட்சிகளில்‌ மொத்தம்‌ 3,46,350 வாக்காளர்கள்‌ உள்ளனர்‌. மேலும்‌ ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான குடிநீர்‌, மின்விசிறி, பெஞ்சு, மின்சார வசதி, கழிவறை, மாற்றுத்திறனாளிகள்‌ எளிதாக வந்து வாக்களிக்க சக்கரநாற்காலி, சாய்தள வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும்‌ செய்யப்பட்டுள்ளன.

முதற்கட்ட தேர்தல்‌ நடைபெறும்‌ 5 ஊராட்சி ஒன்றியங்களில்‌, 7 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்‌ பதவிக்கு 26 வேட்பாளர்களும்‌, 66 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்‌ பதவிக்கு 229 வேட்பாளர்களும்‌, 127 ஊராட்சி மன்ற தலைவர்‌ பதவிக்கு 395 வேட்பாளர்களும்‌, 1020 ஊராட்சி வார்டு உறுப்பினர்‌ பதவிக்கு 2289 வேட்பாளர்களும்‌, என மொத்தம்‌ 1220 பதவிகளுக்கு 2939 வேட்பாளர்கள்‌ போட்டியிடுகிறார்கள்‌. முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ பனிக்கு 4494 வாக்குப்பதிவு அலுவலர்கள்‌ தேர்தல்‌ பணியில்‌ அமர்த்தப்பட்டுள்ளனர்‌. மேலும்‌, காவல்துறை மூலம்‌ 2350 காவலர்கள்‌ 400 பேர்‌ ஹோம்‌ கார்டுஸ்‌, மற்றும்‌ 100 முன்னாள்‌ ராணுவத்தினர்‌ பாதுகாப்பு பணியில்‌ ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்‌.

கிணத்துக்கடவு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான வாக்குப்பதிவு பெட்டிகள்‌ வாக்குச்சீட்டுகள்‌ மற்றும்‌ உபகாரணங்கள்‌ வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பு பணியினை மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌, மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப. அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. பொள்ளாச்சி(வடக்கு) ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான வாக்குப்பதிவு பெட்டிகள்‌ வாக்குச்சீட்டுகள்‌ மற்றும்‌ உபகாரணங்கள்‌ வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பு பணியினையும்‌, பொள்ளாச்சி, மகாலிங்கம்‌ பொறியியல்‌ கல்லூரியில்‌ வாக்குச்சாவடி அலுவலர்கள்‌, வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கணினி மூலம்‌ சுழற்சி முறையில்‌ பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டு வருவதையும்‌, ஆனைமலை ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணும்‌ மையமான வேட்டைக்காரன்புதூர்‌ அரசு மேல்நிலைப்பள்ளியில்‌, வாக்குப்பெட்டிகள்‌, பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும்‌ அறை, ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு, வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்களின்‌ முகவர்கள்‌ உரிய வழியில்‌ சென்று வர ஏதுவாக தடுப்புகள்‌ அமைப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள்‌, குடிநீர்‌, கழிப்பிடம்‌, மின்வசதி, ஆகிய வசதிகள்‌ அமைக்கப்பட்டுள்ளதையும்‌ மற்றும்‌ கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதையும்‌ மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ பார்வையாளர்‌ ஜி.கோவிந்தராஜ்‌ மற்றும்‌ மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌,/மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி ஆகியோர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்‌.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....