கோவை: வணிக பெருமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் கோவை கொடியா அரங்கில் கடந்த டிசம்பர் 24ம் தேதி தொடங்கிய கோவை ஷாபிங் திருவிழா 2019 வரும் ஜனவரி 1ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது.
கோவை: வணிக பெருமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் கோவை கொடியா அரங்கில் கடந்த டிசம்பர் 24ம் தேதி தொடங்கிய கோவை ஷாபிங் திருவிழா 2019 வரும் ஜனவரி 1ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த விழா குறித்து 'கோவை ஷாபிங் திருவிழா -2019' வின் தலைவர் பொன்னுசாமி பேசுகையில், புது பொருட்களை பொதுமக்களுக்கு அடையாளப்படுத்தவும், வாங்கவும், பொருட்களை தொழில் நிறுவனங்கள் விற்கவும் இந்த திருவிழா முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு, வீட்டு உபயோக பொருட்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், விவசாய பொருட்கள் இந்த திருவிழாவில் இடம்பெற்றுள்ளன. தினமும் மாலை நிகழ்ச்சிகள் உள்ளன. இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும் என்றும் 1.5 லட்சம் சதுர அடியில், 500க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. பெற்றோரும், குழந்தைகளும், நண்பர்களும் சந்தோஷமாக ஷாபிங் செய்ய இந்த திருவிழா அமையும் என்று கூறினார்.
இந்த விழாவில் கொடிசியா தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது, 7வது 'கோவை ஷாபிங் திருவிழா -2019' கோவை கொடியா அரங்கில் டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதன் மூலம் வணிக பெருமக்கள், வாடிக்கையாளர்கள் பெரிதும் பயன்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இங்கு விற்கப்படும் பொருட்கள் மிக குறைந்த விலையில், தள்ளுபடி விலையில் கிடைக்கும். 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நபர் ஒருவருக்கு நுழைவு கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் கோவை ஷாபிங் திருவிழாவில் பொருட்களை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமாக குவிந்து வருகின்றனர்.