கோவையில் பிடிபட்ட 15 அடி நீளமுள்ள ராஜநாகம்..! பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விடப்பட்டது

கோவை: கோவை போளுவாம்பட்டி பகுதியில் பிடிபட்ட 15 அடி நீளம் கொண்ட அரியவகை ராஜநாகம் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது.


கோவை: கோவை போளுவாம்பட்டி பகுதியில் பிடிபட்ட 15 அடி நீளம் கொண்ட அரியவகை ராஜநாகம் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது.

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வெள்ளிங்கிரி மலைப் பகுதியில் அமைந்துள்ளது இப்பகுதியில் ஏராளமான யானைகள் காட்டெருமைகள் சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இதில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் உணவு தேடி வருவது வழக்கம்.

இந்நிலையில் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட உட்பட்ட தானிகண்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஈஷா யோக மையத்தின் பின்புறம் சுமார் 15 அடி நீளம் உள்ள ராஜநாகம் சாலையோரத்தில் படுத்து இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், பொதுமக்கள் யாரும் அப்பகுதியில் செல்லாதவாறு பாதுகாப்பு அளித்தனர். இதனையடுத்து, ஈஷா யோக மையத்தில் இருந்த சிலர் 15 அடி நீளமுள்ள பாம்பை லாவகமாகப் பிடித்து வெள்ளிங்கிரி மலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். ஏற்கனவே அதே பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 14 அடி நீளம் உள்ள ராஜநாகம் தனியார் தோட்டத்தில் பிடிபட்ட நிலையில், தற்போது மீண்டும் அதே பகுதியில் ராஜநாகம் பிடிபட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ராஜநாகம் சாலையோரத்தில் இருப்பதாக வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், அவர்களிடம் பாம்பு பிடிப்பதற்கு தேவையான கருவிகள் ஏதும் இல்லாததால் ஈஷா யோக மையத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் இந்த பாம்பை பிடித்ததாக தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...