கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம்; மற்றொரு ஆண் நபரின் டி.என்.ஏ. இருப்பதாக தடயவியல் அறிக்கை

கோவை: கோவை பன்னிமடை பகுதியில் கடந்த மார்ச் மாதம் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், மற்றொரு ஆண் நபரின் டி.என்.ஏ கலப்பு இருப்பதாக தடயவியல் அறிக்கையில் வெளியான தகவலையடுத்து சிறுமியின் தாயார் கோவை நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணை செய்ய மனு தாக்கல் செய்துள்ளார்.


கோவை: கோவை பன்னிமடை பகுதியில் கடந்த மார்ச் மாதம் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், மற்றொரு ஆண் நபரின் டி.என்.ஏ கலப்பு இருப்பதாக தடயவியல் அறிக்கையில் வெளியான தகவலையடுத்து சிறுமியின் தாயார் கோவை நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணை செய்ய மனு தாக்கல் செய்துள்ளார்.

கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமி கடந்த மார்ச் 25ம் தேதி மாயமானர். பின்னர் அடுத்த நாளே வீட்டின் பின்புறத்தில் இருந்து துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக சிறுமி கண்டெடுக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மூச்சுத்திணறடிக்கப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. மேலும் சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிறுமியின் வீட்டிற்கு எதிரே மனைவியை பிரிந்து பாட்டி வீட்டில் வசித்து வந்த தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை 31ம் தேதி கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கின் இறுதி வாதங்கள் கடந்த 19ம் தேதி முடிவடைந்து, 27ம் தேதியான நாளைய தினம் தீர்ப்பு வழங்கப்படும் என போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் தாயார் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சந்தோஷ்குமாரை தவிர்த்து மற்றொரு ஆண் நபரின் டி.என்.ஏ. கலப்பு உள்ளதாகவும், கடந்த மாதமே இந்த அறிக்கை வந்தபோதும் புலன் விசாரணை அதிகாரி நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியும், தான் முதலிலிருந்து சொன்னதை போலவே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு வாய்ப்புள்ளதால், மீண்டும் இந்த வழக்கை பெண் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....